Nagaratharonline.com
 
பாலவாக்கம் ,கொட்டிவாக்கம், நீலாங்கரை கடற்கரைகளை மேம்படுத்துவது குறித்து கருத்து கேட்பு  Mar 3, 14
 
கொட்டிவாக்கம், நீலாங்கரை மற்றும் பாலவாக்கம் கடற்கரைகளை மேம்படுத்துவது குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி திங்கள்கிழமை (மார்ச் 3) பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி: மெரீனா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளைப் போல ரூ.55 கோடி மதிப்பீட்டில் மூன்று கடற்கரைகளை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் மூலம் இந்த திட்டத்துக்கான வடிவமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஓடுதளம், யோகா மற்றும் தியான மேடை, திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், மிதிவண்டி பாதை, நீருற்று, உயிரியல் பூங்கா, சிற்பக் கலைக்கூடம், திறந்தவெளி திரையரங்கம், தொலைபேசி வசதி, கைப்பந்து மற்றும் மட்டைப்பந்து ஆடுகளம், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் புதிதாக உருவாக்கப்படும் .

இது குறித்த பொதுமக்களின் கருத்துக் கேட்பு நிகழ்ச்சி கொட்டிவாக்கம் கடற்கரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலரும் ஆலோசனைகளை மேயரிடம் தெரிவித்தனர்.