Nagaratharonline.com
 
உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் இ.பேங்கிங் நிகழ்ச்சி  Mar 22, 14
 
காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் இ.பேங்கிங் குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஹேமாமாலினி தலைமைவகித்துப் பேசினார். பேங்க் ஆப் இந்தியா நிதி அதிகாரி கோபிகிருஷ்ணா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இணையதளத்தில் பணப் பரிமாற்றம் செய்வது குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.