|
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் நிறுவியோர் நாள் விழா Mar 31, 14 |
|
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சார்பில் நிறுவியோர் நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு சன்மார்க்க சபைத் தலைவர் ப.சா. சிங்காரம் தலைமை வகித்தார். கல்லூரிக்குழுச் செயலர் அழ. சாமிநாதன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் மு. திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழைப் பாடமாக எடுத்து படிப்பவர்கள் தமிழ்மொழியில் திறன் பெற்றவர்களாக உருவாகி நம்பிக்கையுடன் உழைத்தால் வளமான வாழ்வை பெறுவது உறுதி. அதற்கு இக்கல்லூரியில் பயின்று இன்று நல்ல பணிகளில் இருக்கும் முன்னாள் மாணவர்களே சாட்சி.
எனவே மாணவ, மாணவியர் தமிழைப்பாடமாக எடுத்து படித்து வளமான வாழ்வை பெற முன்வரவேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது. |
|
|
|
|
|