Nagaratharonline.com
 
பொன் புதுப்பட்டி : மின்கசிவு காரணமாக வீடு தீக்கிரை.  Apr 2, 14
 
பொன் புதுப்பட்டி வீரன்செட்டி ஊரணி தெருவை சேர்ந்தவர் கே. ராஜாமணி. இவர் பஞ்சாங்கம் கணித்து சொல்லும் பணி செய்து வந்தார். இவர் தனது வீட்டில் சாமி கும்பிடும் போது மின்கசிவு காரணமாக வீட்டிலிருந்த குண்டு பல்பு திடீரென வெடித்ததில் வீடு முழுவதும் தீ பரவியது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலை அலுவலர் கரு. பெரியதம்பி தலைமையிலான தீயணைப்பு பணியாளர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டிலிருந்த பஞ்சாங்கங்கள், நவதானியங்கள் மற்றும் தளவாடச்சாமான்கள் ஆகியவை எரிந்து சாம்பலாயின.