|
பட்டமங்கலத்தில் தேரோட்டம் Apr 13, 14 |
|
பட்டமங்கலம் ஸ்ரீமதியாத கண்ட விநாயகர் ஸ்ரீ அழகு சவுந்தரி அம்பாள் கோயிலில்,பங்குனித் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.பட்டமங்கலத்தில், மார்ச் 23 ல் அடைக்கலம் காத்த அய்யனார் பூதமெடுத்து, இரவு காப்புக் கட்டப்பட்டு துவங்கியது. மார்ச் 28ல் சைவ முனீஸ்வரர் பூஜை நடந்தது.பின்னர் பூதம் பிள்ளையார் கோவில் வருதல்,அய்யனார் கோயில் செல்லுதல், பூச்சொரிதல் விழா நடந்தது.தொடர்ந்து, அம்பாள் கோயிலில், ஏப்.5ல், காப்புக்கட்டப்பட்டு, ரத உற்சவம் துவங்கியது. ஏப்.,11ல் பால்குடம் எடுத்து வழிபாடு நடந்தது. நாளை மாலை 4 மணிக்கு, தேரோட்டம் நடைபெறுகிறது. |
|
|
|
|
|