Nagaratharonline.com
 
பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷ விழா  Apr 13, 14
 
பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, நந்திக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதேபோல, வேந்தன்பட்டி நந்தீஸ்வரர் கோயில், புதுப்பட்டி நகரத்தார் சிவன்கோயில், திருக்களம்பூர் கதலீஸ்வரர் கோயில், புதுப்பட்டி மலையாண்டி கோயில், உலகம்பட்டி உலகநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சனிப்பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.