|
பிள்ளையார்பட்டியில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கப்படும் Apr 13, 14 |
|
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை தீர்த்தவாரி நடைபெறும்.
அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தங்கக் கவசத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மூலவர் சன்னதி அருகில், உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்தில், எழுந்தருளுவார். தொடர்ந்து 9.30 மணி அளவில், அங்குசத் தேவருக்கும், அஸ்திரத் தேவருக்கும், கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.
பின்னர் மதியம், சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும்,பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், வரிசையில் செல்ல நிழல் கொட்டகை வசதி, முக்கிய ஊர்களிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மாலையில், புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்படும் |
|
|
|
|
|