|
வலையபட்டி மலையாண்டி கோயிலில் பங்குனி உத்திர விழா Apr 13, 14 |
|
வலையபட்டி மலையாண்டி கோயிலில் பங்குனி உத்திர விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு நடைபெற்ற விழாவில் கோயிலின் முன் வளர்க்கப்பட்ட அக்கினி குண்டத்தில் பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவையொட்டி மலையாண்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. |
|
|
|
|
|