Nagaratharonline.com
 
பாகனேரி புல்வநாயகியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா  Apr 15, 14
 
பாகனேரி புல்வநாயகியம்மன் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பூச்சொரிதல் நடைபெற்றது. பாகனேரி பழையவளவு, புதுவளவு வர்த்தக சங்கம்,தொழிலாளர்கள்,காடனேரி கிராமத்தினர் என 6 தேர்களில் வாணவேடிக்கை,மின் அலங்காரத்துடன் 100க்கும் மேற்பட்ட வண்ண மலர்களுடன் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அம்மனுக்கு பூக்கள் சூட்டப்பட்டு பூச்சொரிதல் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.