|
வேகுப்பட்டி ஆஞ்சனேயர் கோயிலில் ஆளுநர் வழிபாடு Apr 15, 14 |
|
வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயர் கோயிலின் முன் மண்டபத்தை தமிழக ஆளுநர் கு. ரோசய்யா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து வழிபட்டார்.
சா.அண. முத்துப்பழனியப்பன்,மு. மீனாட்சி தம்பதியால் இக்கோயில் திருப்பணிகள் நிறைவுற்று வரும் 18-ம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இங்கு தமிழகத்தில் 3-வது பெரியதாக 24 அடி உயரத்தில் ஆஞ்சனேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அழைப்பாளராக வந்த தமிழக ஆளுநர் கு. ரோசய்யா கோயிலின் முன் மண்டபத்தைத் திறந்துவைத்து வழிபட்டார். தொடர்ந்து இங்குள்ள பெருமாள் கோயிலிலும் வழிபட்டார். |
|
|
|
|
|