|
காரைக்குடியில் ஒரே வாரத்தில் நான்கு மாணவிகள் மாயம்; பீதியில் பெற்றோர் Apr 23, 14 |
|
காரைக்குடியில்,கடந்த ஒரு வாரத்தில், நான்கு மாணவிகள், மாயமாகி உள்ளனர். காரைக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சத்யா,19. இவர் பி.ஏ.,இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி, கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
காரைக்குடி அண்ணாநகர் நாவலர் தெருவை சேர்ந்தவர் கலைசெல்வி,17. பிளஸ் 2 முடித்துவிட்டு, விடுமுறையில் தையல் வகுப்புக்கு சென்று வந்துள்ளார். கடந்த 17ம் தேதி, மதியம், இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது தோழியும் டூவீலரில் தையல் வகுப்புக்கு சென்றவர்கள், வீடு திரும்பவில்லை.
கோட்டையூர், எழில்நகரை சேர்ந்தவர் சீதா,23. கடந்த 19ம் தேதி, தேர்வு எழுத சென்றுள்ளார். தேர்வு முடிந்தவர் வீடு திரும்பவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், காரைக்குடி பகுதியில், நான்கு மாணவிகள் மாயமாகியுள்ளனர். வழக்கம்போல், போலீசார் காரணங்களை கூறினாலும், மாணவிகள் தொடர் மாயமானது பெற்றோரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. |
|
|
|
|
|