|
காரைக்குடியில் பன்னிருதிருமுறைத்திரட்டு நூல் வெளியீட்டு விழா Apr 26, 14 |
|
காரைக்குடியில் பன்னிருதிருமுறை மன்றம் சார்பில் பேராசிரியர் தெ. சொக்கலிங்கம் தொகுத்த பன்னிருதிருமுறைத்திரட்டு நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது.
கவிஞர் அரு. சோமசுந்தரம் தலைமைவகித்தார். அவர் பேசுகையில், வடமொழிக்கு நான்கு வேதங்கள் போல தமிழுக்கு 12 திருமுறைகள் வேதமாகும். 27 புலவர்கள் பாடிய 18 ஆயிரம் பாடல்களில் தமிழ் சமுதாயத்தின் சரித்திரம், இயற்கை, பூகோளம், விஞ்ஞானம், ஆன்மிகம், வாழ்வியல் ஆகிய அனைத்தும் பேசப்படுகின்றன. பன்னிரு திருமுறை படித்தால் பாவம் கரையும், பக்குவம் பெருகும் என்றார்.
விழாவில், மெ. மெய்யப்பன் வரவேற்றுப் பேசினார். நூலாசிரியர் சொக்கலிங்கம் அறிமுக உரையாற்றினார். விழாவில் சொக்கானேந்தல் முருகப்பன், டாக்டர் சபா. அருணாசலம், கவிஞர் நா. மீனவன், பேராசிரியர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். |
|
|
|
|
|