Nagaratharonline.com
 
மகிபாலன்பட்டியில் பூத்திருவிழாற்கு மதுரை ஐகோர்ட் அனுமதி  Apr 27, 14
 
மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை, நடத்த மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு, பூத்திருவிழா நடக்கும்.

கடந்தாண்டு, விழா நடத்துவதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால், நடக்கவில்லை. இதையடுத்து, மகிபாலன்பட்டி மக்கள், சித்ரா பவுர்ணமி பூத்திருவிழா நடத்த, அனுமதி கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். இதையடுத்து, அனைத்து தரப்பினரும் பங்கேற்று, பூத்திருவிழா நடத்தலாம் என, கோர்ட் அனுமதி அளித்துள்ளது.