|
திருக்கோளக்குடி கோயில் கலசம் திருட்டு Apr 28, 14 |
|
திருக்கோளக்குடி மலையில்,வரலாற்று சிறப்பு மிக்க குடைவரைக்கோயில், ஆத்மநாயகி அம்மன் திருக்கோளநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது.கடந்த 25 ம் தேதி கோயில் நடைசாத்தி விட்டு,மறுநாள் காலை, நடை திறந்த போது மலையின் உச்சியில் உள்ள,குடைவரைக் கோயிலின் மேல், தனியாக அமைந்துள்ள விமானத்தில் கலசம் இல்லாததைக் கவனித்த, கோயில் கண்காணிப்பாளர் கேசவன், பூலாங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சுற்றுச் சுவர் இல்லாத நிலையில் உள்ள அந்த கோயில் விமானத்தில் இருந்த சுமார் 4 கிலோ எடையுள்ள தாமிர கலசம் திருடு போனது தெரிந்தது. |
|
|
|
|
|