|
400 ஆண்டுகளாக காவடி சுமந்து செல்லும் நகரத்தார்கள் Jan 24, 10 |
|
தேவகோட்டை,ஜன.22: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலிருந்து கடந்த 400 ஆண்டுகளாக நகரத்தார்கள் காவடி சுமந்து பழனிக்குப் பாதயாத்திரையாக சென்றுவருகிறார்கள்.
நகரத்தார் அதிகம் இருக்கும் 96 ஊர்களிலிருந்து 200 காவடிகள் புறப்பட்டு பாதயாத்திரையாக தைப்பூசத்தன்று பழனி சென்று காவடிகளை செலுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
தேவகோட்டையிலிருந்து மட்டும் 40 காவடிகள் செல்கிறது.
கண்டனூர் பழனியப்பச் செட்டியார் குருநாதராக இருந்து வழிநடத்தி வருகிறார்.
இவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி பழனி பாதயாத்திரை பஜனை மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பஜனைக்குழு தலைவர் காந்தி தலைமை வகித்தார். கயிலை மணி நீலா இறைவணக்ம் பாடினார்.
காசிநாதன் வரவேற்றார். பொற்கிழி கவிஞர் அரு.சோமசுந்தரன், ஜமீன்தார் நாராயணன் செட்டியார், பேராசிரியர் சபாஅருணாச்சலம் ஆகியோர் வாழ்த்தினர். கவிஞர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்
Source:Dinamani |
|
|
|
|
|