|
பொன்னமராவதி பகுதியில் கனமழை May 10, 14 |
|
பொன்னமராவதி பகுதியில் கன மழை பெய்தது. இப்பகுதியில் பல மாதங்களாக கடுமையான வெப்பம் வாட்டி வந்தது. பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்டிருந்த தென்னை மரம், மா மரம் போன்ற மரங்கள் உட்பட மரங்கள் செடிகள் எல்லாம் காய்ந்து கருகிவிட்டது.
கண்மாய், குளங்கள் எல்லாம் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தது. ஆடு, மாடுகள் எல்லாம் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டுவந்தன. இந்த நிலையில் தொடர் அடை மழை பெய்தது. பொன்னமராவதி, கொப்பனாபட்டி, வேந்தன்பட்டி, ஆலவயல், மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் கன மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. |
|
|
|
|
|