|
200 கிலோ மாம்பழம் பறிமுதல் May 10, 14 |
|
பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் கார்பைடு கல் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 200 கிலோ மாம்பழங்கள் பேரூராட்சி பணியாளர்களால் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
பொன்னமராவதியில் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்கப்படுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 200 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. |
|
|
|
|
|