Nagaratharonline.com
 
அ.தி.மு.க., வெற்றிக்கு திருப்பம் தந்த திருப்புத்தூர் தொகுதி !  May 17, 14
 
அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதன், 4,75,993 ஓட்டுக்களை பெற்று, 2.29 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,விற்கு அதிக பட்சமாக திருப்புத்தூரில் 85,489 ஓட்டுக்கள் கிடைத்துள்ளது. அடுத்ததாக, சிவகங்கை - 83,597, காரைக்குடி - 83,522 ஓட்டுக்களும், மானாமதுரை - 82,484, திருமயம் - 72,251, ஆலங்குடி - 68,383 ஓட்டுக்களும் கிடைத்துள்ளது.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10,27,228 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் நோட்டாவுக்கு 8042 வாக்குகள் பதிவாகி இருந்தது. காப்புத் தொகையத் திரும்பப் பெற பதிவான வாக்கில் இருந்து நோட்டா வாக்கினை கழித்து விட்டு வரும் மொத்த எண்ணிக்கையில் 6ல் 1 பங்கு வாக்கு பெற்றிருந்தால் காப்புத் தொகை திரும்ப வழங்கப்படும் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் விதி.

பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 1,33,763, காங்.வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 1,04,678, இ.கம்யூ. வேட்பாளர் எஸ்.கிருஷ்ணன் 20,473, ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.தமிழரிமா 2,131, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 3,056 வாக்குகளை மட்டுமே பெற்றனர்.

இதனால் மொத்தத்தில் 25 வேட்பாளர்களும் தங்களுடைய டெபாசிட் தொகையை இழந்தனர்.