Nagaratharonline.com
 
NEWS REPORT: 05/06/2014 பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேகம்  May 24, 14
 
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் ஜூன் 5இல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

பட்டமங்கலத்தில் இறைவன் கார்த்திகை பெண்களுக்கு அட்டமாசித்தியை உபதேசம் செய்கையில் பாராமுகமாக கேட்ட பெண்களை சபித்து ஒரு ஆலமரத்துக்கு கீழ் கல்லுருவாக்கினார். பல ஆண்டுகளுக்குப் பின் இறைவன் அருளால் சாப விமோசனம் பெற்றனர் கார்த்திகைப் பெண்கள். எனவே அட்டமாசித்தி பெற்ற ஸ்தலம் என்ற சிறப்புடையது பட்டமங்கலம். இக்கோயிலில் கிழக்கு நோக்கி தட்சிணாமூர்த்தி மூலவராக வீற்றிருக்கிறார்.

இக்கோயிலில் தற்போது திருப்பணி நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஜூன் 1இல் காலை 9 மணிக்கு விநாயகர் பூஜையும், மாலை 6.45 மணிக்கு ரúக்ஷôகன ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளன.

2ஆம் நாள் காலை 9.15 மணிக்கு கஜ பூஜையும், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தியும், 3ஆம் நாள் காலை 8.30 மணிக்கு கடஸ்தாபனமும், மாலை 5.30 மணிக்கு முதலாம் கால யாகசாலை பூஜையும், நான்காம் நாள் காலை 9 மணிக்கு 2 ஆம் கால யாகசாலை பூஜையும், மாலை 6.30 மணிக்கு 3 ஆம் கால யாகசாலை பூஜையும், அதனைத் தொடர்ந்து ஜூன் 5 -ல் அதிகாலை 4.30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், காலை 8.30 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகமும், பகல் ஒருமணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். மாலை திருக்கல்யாண வைபவமும் இரவில் ஐம்பெரும் கடவுளர் திருவீதி உலாவும், நடைபெறும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் வீரப்பச் செட்டியார் செய்து வருகிறார்கள்.