|
பழனி தைப்பூச திருவிழா: 170 சிறப்பு பஸ்கள் Jan 24, 10 |
|
பழனி, ஜன. 23-
பழனி முருகன் கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக் கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்தும், அந்த இடங்களை சுற்றி உள்ள பகுதியில் இருந்தும் வருகிற 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் பழனிக்கும், பழனியில் இருந்து மேற்குறிப்பிட்ட இடங்களுக்கும் இயக்கப்படுகின்றன.
மேலும் தைப்பூச திரு விழாவையொட்டி 170 சிறப்பு பஸ்களும், தேவைக்கேற்ப மேற்குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழனி செல்லும் பக்தர்களின் வசதிக்காக மதுரை, திண்டுக் கல், பழனி, திருச்சி, காரைக் குடி, புதுக்கோட்டை, தேனி, கரூர், நத்தம் ஆகிய பஸ் நிலையங்களில் பக்தர் களுக்கு வழிகாட்டவும், உதவிக்கும் போக்குவரத்து கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மேல்குறிப்பிட்ட பஸ் நிலையங்களில் உடனடி தொடர்புகளுக்காக வயர் லெஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என கோட்ட பொதுமேலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
Source:Maalaimalar |
|
|
|
|
|