|
பொன்னமராவதி பொன்.புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயில் மாம்பழத் தேரோட்டம் May 28, 14 |
|
பொன்னமராவதி பொன்.புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயில் மாம்பழத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 20-ம் தேதி காப்புக்கட்டப்பட்டு, தொடர்ந்து தினந்தோறும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி வீதி உலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, புதன்கிழமை மாலை மாம்பழத் தேரோட்டம் நடைபெற்றது.
தேர் தெற்குரதவீதி, மேலரத வீதி, வடக்குரதவீதி வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தின் போது தேர் வந்த வீதிகளின் இருபுறமும் உள்ள வீடுகளின் மாடங்களிலிருந்து மாம்பழங்கள் பக்தர்களுக்கு வீசப்பட்டன. அதை பக்தர்கள் அம்மனின் பிரசாதமாகப் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர். விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர். |
|
|
|
|
|