|
கண்டனூர் நகர சிவன் கோயிலில் திருவாசக விழா Jun 3, 14 |
|
கண்டனூர் நகர சிவன் கோயிலில் திருநாவுக்கரசர் இறைபணிமன்றம் சார்பில் திருவாசக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
96 ஊர் நகரத்தார் பாதயாத்திரைக்குழு, திருநாவுக்கரசர் இறை பணிமன்றம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் கவிஞர் அரு. சோமசுந்தரன் தலைமை வகித்துப் பேசுகையில், திருவாசகம் பகவத்கீதை போன்றது. அதனை படித்தால் மனவளம், ஆன்ம பலம், அறிவுத்தெளிவு, தேக சுத்தி போன்றவை ஏற்படும். திருவாசகத்தை உருகிப்படித்தால் கண்ணீர் சுரக்கும். ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் இறைவன் வந்துள்ளதாக அர்த்தம்.
ஆங்கிலப்பாதிரியாரான ஜி.யு. போப் திருவாசகத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அப்படிப்பட்ட திருவாசகம் தான் தமிழுக்கு வேதம் என்றார்.
விழாவில், திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. கோயில் அறங்காவலர் சொக்கு சுப்பிரமணியன் வரவேற்றுப்பேசினார். கவிஞர் அர. சிங்காரவடிவேலன் தொடக்க உரை யாற்றினார். சொக்கலிங்கம், அருணாசலம், மாணிக்கம் உள்ளிட்டோர் பேசினர்.
விழாவில் காரைக்குடி, தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார நகரத்தார் மற்றும் திருவாசக இறைபணி மன்றத்தினரும் கலந்துகொண்டனர். முடிவில் அறங்காவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினா |
|
|
|
|
|