Nagaratharonline.com
 
தேவகோட்டை நால்வர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை  Jul 3, 14
 
தேவகோட்டை நால்வர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை மற்றும் திருவாசக கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

தேவகோட்டை நால்வர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை மற்றும் திருவாசக கருத்தரங்கம் பொற்கிழிக்கவிஞர் அரு.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. காலை 9 மணியளவில் எட்டாம் திருமுறை திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. செந்தில்நாதன் வரவேற்றார். ஞானதான சபை தலைவர் திண்ணப்பன், துணைத்தலைவர் சுப்ரமணியன், கவிஞர் உமா, பேராசிரியர் சுப்பையா, பேராசிரியர் தேவநாவே, அமராவதி புதூர் புலவர் வள்ளியப்பன், ஓவியர் அப்சரா செல்லப்பன் ஆகியோர் உரையாற்றினர்.

தலைவர் அரு.சோமசுந்தரம் பேசுகையில், மாணிக்கவாசகர் ஒரு தெய்வப்பிறவி, தெய்வத்தை நேரில் கண்டவர்,பொய்யான வாழ்வில் இருந்து மெய்யான வாழ்வை நோக்கி பயணம் செய்தவர். உலக வாழ்வின் நுட்பங்களை செறிவாக பாடியவர். இறை அருளால் தலையால் நடந்தவர், இதை தலையால் நடந்தே விடைப்பாகா என திருவாசகத்தில் கூறுகிறார். குதிரை வாங்கப்போய் ஞானம் வாங்கிவந்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றில் நரியை பரியாக்கி என்ற பாடலில் பதிவு செய்துள்ளர். அவரது திருவாசகத்திற்கு ஈடு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.