Nagaratharonline.com
 
ஆ.தெக்கூர் கோயில் காளைக்கு அஞ்சலி  Jul 10, 14
 
ஆ.தெக்கூர் கிராமத்தில் வியாழக்கிழமை இறந்த கோயில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். 5 வயது நிரம்பிய இக்காளைக்கு வருடந்தோறும் அய்யனார் கோயில் ஆனித் திருவிழாவில் தங்கத்தினாலான நெற்றிப் பட்டயம் அணிவித்து மாலையிட்டு மரியாதை செய்வது வழக்கம். இக்காளைக்கு கிராமத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். காளையின் இறுதி ஊர்வலம் வெள்ளிக்கிழமை(ஜூலை 11) நண்பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.