|
முன்னாள் நீதிபதி AR.லட்சுமணன் குடும்பத்தினர் சார்பில், ஷீர சாயிபாபா கோயிலுக்கு,தங்கதேர் Jul 10, 14 |
|
முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் குடும்பத்தினர் சார்பில், தேவகோட்டை ஷீரடி சாயிபாபா கோயிலுக்கு, தங்கதேர் வழங்கப்பட உள்ளது. இதை உருவாக்கும் பணியை, மூ.வி.செம்பொன் அருணாசலம் மேற்பார்வையில், காரைக்குடி சிற்பி சேது தியாகராஜன் மேற்கொண்டார். கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடந்த இத்திருப்பணி, முடிந்து தேவகோட்டை சாயிபாபா கோயிலில், இன்று காலை வெள்ளோட்டமும், நாளை தங்கரத சுவாமி புறப்பாடும் நடக்க உள்ளது.
தங்கத்தால் ஆன இத்தேரை உருவாக்கிய சேது தியாகராஜன் கூறும்போது: தேர் செய்யும் பணி, கடந்த 10 மாதங்களாக நடந்து வந்தது. உயரம் 10 அடி, அகலம் ஐந்தரை அடி. நான்கு சக்கரங்கள் கீழே பொருத்தப்பட்டு, கையால் இழுத்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர தகடையின் மேல் தேர் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எண்கோண வடிவில் எட்டு தூண்கள் உள்ளன. முன்புறம் குதிரை, தேரோட்டியாக பிரம்மன், நான்கு வெண்தாமரை பெண்கள், எட்டு யாழி, எட்டு கந்தர்வர்கள், எட்டு பூதம், 16 நந்தி, எட்டு சாயிபாபா சிலை, எட்டு சூரியகாந்தி பூ , கர்ணகூடு கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் ஷீரடி சாயிபாபாவுக்கு அமைக்கப்பட்டுள்ள முதல் தங்க தேர் இதுவாகும், என்றார். |
|
|
|
|
|