|
தொடரும் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் மவுனம் Feb 3, 10 |
|
பொன்னமராவதி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுகை மாவட்டத்தில் பெரிய பேரூராட்சியாக இருப்பது பொன்னமராவதிதான். பெரிய பேரூராட்சி என்ற பெயர் மட்டுமே உள்ளது. ஆனால் கிராம ஊராட்சி போன்று செயல்பாடுகளில் உள்ளது. பொன்னமராவதியில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் தலையாய பிரச்னையாக இருப்பது ஆக்கிரமிப்பு தான். ஆண்டு தோறும் பெயரளவிற்கு மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றம் நடக்கிறது. முக்கிய ரோடுகள் தொடங்கி வார்டில் உள்ள தெருக்கள் வரை ஆக்கிரமிப்புகள் உள்ளது. அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் தொடரும் இந்த செயலால் பொன்னமராவதி பகுதி மக்கள் தினமும் கண்ணீர் வடித்து வருகின்றனர். அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்துகொண்டு பின் அவற்றிற்கே பட்டா கேட்டு போராட்டம் நடத்துவது அதிகரித்து வருகிறது. மேலும் பொன்னமராவதி பஸ்ஸ்டாண்ட், சந்தை, தினசரி மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் கடை ஏலமெடுத்தது போன்று போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதே போன்று அனுமதியில்லாமல் பிளக்ஸ் போர்டுகள் அதிகளவில் உள்ளது. இதனை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்வது இல்லை. புதுகை கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
source ; dinamalar |
|
|
|
|
|