|
சூரக்குடிகோயிலில் கல்வி வளர்ச்சி நாள் விழா Feb 3, 10 |
|
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சூரக்குடி நகரச் சிவன் கோயிலில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.
விழாவில், கவிஞர் அரு. சோமசுந்தரம் தலைமை வகித்துப் பேசினார். கவிஞர் ஆண்டியப்பன் வரவேற்றுப் பேசினார். காரைக்குடி சிங்காரம் செட்டியார், கோயில் அறங்காவலர் முத்துப்பழனியப்பச் செட்டியார், செந்தூரான் கல்வி நிறுவன நிறுவனர் வைரவன், என்.பி. ராமசாமி, அழகப்பா பல்கலைக்கழகத் தேர்வாணையர் வி. மாணிக்கவாசகம், வள்ளிக்கண்ணு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, கயிலைமணி நீலா இறைவணக்கம் பாடினார். முடிவில், பழனியப்பன் நன்றி கூறினார்.
source : Dinamani |
|
|
|
|
|