Nagaratharonline.com
 
NEWS REPORT: தார்வாசம் வீசும் தேசிய நெடுஞ்சாலையில் தென்றல் வீசும் மரங்கள் நடப்படுமா?  Aug 24, 14
 
திருச்சி - புதுக்கோட்டை - காரைக்குடி வரையிலான 87 கிமீ தொலைவுக்கு இரு வழிசாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கும் முன்பு சாலையின் இரு மருங்கிலும் பல ஆயிரம் மரங்கள் இருந்தன. சாலைப்பணிக்காக அவற்றை வேருடன் அப்புறப்படுத்தி பணிகள் நிறைவேற்றப்பட்டன.

இன்றைய பருவ நிலை மாற்றத்துக்குக்கான அடிப்படைக்காரணம் பூமிப்பந்து சூடானதுதான் என்பதை உலகம் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு பூமியை பாதுக்காப்பதற்காக இயற்கை கொடுத்த பசுமைப் போர்வையை ஈவு இரக்கமின்றி கிழித்தெறிந்துதான் என்பதை தாமதமாக உணரத்தொடங்கியுள்ளோம்.

எனவே இப்போதும் காலம் கடந்து விடவில்லை. நம்முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற வழிமுறைகளைப் பின்பற்றி நாடெங்கும் மரம் வளர்ப்போம். குறிப்பாக தார்வாசம் வீசும் நெடுஞ்சாலைகளின் இரு மருங்கிலும் தென்றல் வீசும் மரங்களை வளர்த்தெடுப்போம். சுற்றுச்சூழலை அழகு படுத்துவோம். அதை விடாது பாது காப்போம்

வீட்டு ஒரு மரம் வளர்போம் அதே போல சாலையோரங்களிலும் மரங்களை வளர்க்க வேண்டும் என்பதே தற்போதுள்ள தேவையாகும். இதை சம்மந்தப்பட்ட துறையினர் நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.