Nagaratharonline.com
 
NEWS REPORT: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் கும்பாபிஷேகம்  Sep 14, 14
 
 
திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் ராஜகோபுரம், மூலவர் விமானம், சிவன், அம்மன் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளின் கோபுரங்கள், கருவறைகள் ஆகியவற்றில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கும்பாபிஷேகத்தையொட்டி வியாழக்கிழமை காலையில் நான்காம் காலயாகப் பூஜையும், கலசங்கள் புறப்பாடும் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்துக்கு முன்பு மூன்று முறை கருடன் வட்டமிட்டது. இதனைத்தொடர்ந்து, விமானத்தின் மூலம் கோபுரத்தின் மேல் பகுதியில் மலர்கள் தூவப்பட்டன.

இதையடுத்து, ராஜகோபுரம், விமானங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.