Nagaratharonline.com
 
நீண்ட தூரம் அலையும் கிராமத்தினர்: தனி ஒன்றியம் அமைக்கப்படுமா?  Feb 8, 10
 
சிவகங்கை அருகே மதகுபட்டியை தலைமையிடமாக கொண்டு, ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். சிவகங்கை ஒன்றியத்திற்கு உட்பட்டது மதகுபட்டி ஊராட்சி. சுற்றியுள்ள அலவாக்கோட்டை, அழகமாநகரி, நாமனூர், திருமலை ஊராட்சி மக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இரண்டு பஸ்கள் மாறி வர வேண்டியுள்ளது. ஏரியூர், அரளிக்கோட்டை ஊராட்சி கிராமங்களில் சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ளது. இக்கிராமத்தினர் அங்கு செல்ல 25 கி.மீ.,தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.




அதே போல பாகனேரி, நகரம்பட்டி, செம்பனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ளது. இப்பகுதியினர் ஒன்றிய அலுவலகத்திற்கு, 35 கி.மீ., தூரம் செல்கின்றனர். சிவகங்கை, காளையார்கோவில், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, இக்கிராமங்களின் மைய பகுதியாக மதகுபட்டி உள்ளது. இங்கு போலீஸ் ஸ்டேஷன், மின்வாரிய, பத்திர பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதனால், மதகுபட்டியை சுற்றியுள்ள கிராமங்களை ஒருங்கிணைத்து, தனி ஒன்றியம் அமைக்கலாம். இதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகள் முயற்சிக்க வேண்டும்.


source : Dinamalar