|
NEWS REPORT: தீபாவளி: கங்கா ஸ்நானம் காசி யாத்திரைக்கு மதுரையில் இருந்து சுற்றுலா ரயில் Oct 2, 14 |
|
10 நாள்கள் கொண்ட தீபாவளி கங்கா ஸ்நானம் காசி யாத்திரை சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்.18 ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக அலகாபாத், காசி, கயா போன்ற புனித தலங்களை தரிசிக்கும் சுற்றுலாத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளியன்று காசியில் கங்கை நதியில் புனித நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் தங்க அன்னபூரணியை தரிசிக்கவும், கங்கா ஆரத்தி, மிட்டாய் திருவிழாவை காணும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. இச் சுற்றுலாவுக்கு நபருக்கு ரூ.5,995 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்குவதற்கு ஹால் வசதி, வாகன வசதி ஆகியவை அடங்கும். மேலும் உடைமைகளை ரயிலிலேயே வைத்துவிட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்துச் செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இன்னிசை மற்றும் அறிவிப்புகளைக் கேட்க ஒலி பெருக்கி வசதி, ஒவ்வொரு ரயில் பெட்டிக்கும் தகுதிவாய்ந்த மேலாளர்கள், பாதுகாவலர்கள், உணவு பரிமாறுபவர்கள், கோச் கிளீனர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இந்த சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் 0452-2345757, 9003140714 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். |
|
|
|
|
|