Nagaratharonline.com
 
பிரீமியம் சிறப்பு ரயில்களில் அதிக கட்டணம்: பயணிகள் அதிர்ச்சி  Oct 6, 14
 
தீபாவளி பண்டிகைக்கான, பிரீமியம் சிறப்பு ரயில்களில், கட்டணம் பல மடங்கு அதிகமாக உள்ளதால், முன்பதிவு செய்ய முயன்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு வசதியுள்ளதால், பெரும்பாலானோர் முன்பதிவு செய்ய முற்பட்டனர்.

ரயிலில் இருக்கும் பயணச் சீட்டுகளுக்கு கிராக்கி இருந்த நிலையில், கட்டணம் உயர்ந்துக் கொண்டே சென்றது. முன்பதிவு துவங்கிய, 20 நிமிடங்களிலே, சென்னை - திருச்சிக்கு மட்டுமே, 930 ரூபாயாக கட்டணம் உயர்ந்தது.மதியம், 3:30 மணி நிலவரப்படி, நெல்லைக்கு, மூன்றடுக்கு 'ஏசி' பெட்டியில் பயணிக்க, 1,270 ரூபாய்; இரண்டடுக்கு 'ஏசி' பெட்டியில் பயணிக்க, 1,805 ரூபாயாக உயர்ந்திருந்தது.கோவைக்கு, மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டியில் பயணிக்க, 1,065 ரூபாய்; இரண்டடுக்கு, 'ஏசி' பெட்டியில் பயணிக்க, 1,445 ரூபாயாக உயர்ந்தது.விமான கட்டணம் போல் கட்டணம் உயர்ந்ததால், முன்பதிவு செய்ய முயன்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அத்துடன் பெரும்பாலானவர்கள் ரயில் பயணத் திட்டத்தையும் மாற்றிக் கொண்டனர். அதனால், நெல்லைக்கு செல்லும் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுகள் மட்டுமே விற்றன. மற்ற பெட்டிகளுக்கான டிக்கெட்டுகள் காலியாக இருந்தன.