|
நெற்குப்பையில் அ.தி.மு.க.வினர் பால்குடம் எடுத்து வழிபாடு Oct 7, 14 |
|
அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி செவ்வாய்க்கிழமை நெற்குப்பை பேரூராட்சி, வடக்கு வாசல் பிடாரிஅம்மன் கோயிலுக்கு 1008 பால்குடம் சுமந்து அக்கட்சியினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் மரகதவள்ளி தாயார் ஆலயத்தில் கூடினர்.
அங்கிருந்து சிவகங்கை மக்களவை உறுப்பினர் செந்தில்நாதன், பாம்கோ மாநிலத் தலைவர் கே.கே.உமாதேவன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ, நெற்குப்பை பேரூராட்சித் தலைவர் சஞ்சீவிராஜா ஆகியோருடன் அ.தி.மு.க.வினரும் பொதுமக்களும் பால்குடம் சுமந்து கீழராஜவீதி, மேலப்பிள்ளையார்வீதி, நெற்குப்பை பிரதானசாலை, கீழக்குடம் வீதி, சுப்பிரமணிய கோயில் வீதி பேரூராட்சி அலுவலகம் வழியாக அருள்மிகு வடக்குவாசல் பிடாரிஅம்மன் கோயிலை அடைந்தனர். ஊர்வலத்தில் 1008 பால்குடங்கள் உள்ளிட்ட சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது, |
|
|
|
|
|