Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்  Oct 15, 14
 
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமுக்கு கல்லூரியின் முதல்வர் க. கனகராசு தலைமை வகித்தார். முகாமை கல்லூரிக் குழுத் தலைவர் அ. சாமிநாதன் தொடக்கி வைத்தார். மீனாட்சி மருத்துவமனை கண் மருத்துவர் சங்கரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 900 மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். 50 மாணவர்களுக்கு பார்வைக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமும், ஆலோசனையும் வழங்கப்பட்டது.