Nagaratharonline.com
 
NEWS REPORT: தமிழக அரசில் 4963 குரூப்-4 பணி: TNPSC அறிவிப்பு  Oct 18, 14
 
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள 4963 Junior Assistant, Bill Collector, Typist, Steno-Typist Grade-III, Field Surveyor, Draftsman போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 4963

தேர்வு கட்டணங்களை செலுத்த கடைசி தேதி: 14.11.2014

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2014

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2014 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை.

தேர்வு மையங்கள்: எழுத்துத் தேர்வு மாவட்ட, தாலுகா என 244 மையங்களில் நடைபெறும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தேர்வு குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/18_2014_not_eng_grp4_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.