Nagaratharonline.com
 
கவிஞர் அரு.நாகப்பன், எழுத்தாளர் கயல் தினகரனுக்கு "கவியரசர்' விருது  Oct 19, 14
 
 
கவிஞர் கண்ணதாசன் விழாவையொட்டி, காரைக்குடி கண்ணதாசன் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் கவிஞர் அரு.நாகப்பன், எழுத்தாளர் கயல் தினகரன் ஆகியோருக்கு கவியரசர் விருதுகள் வழங்கப்பட்டன.

கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் 11-ஆம் ஆண்டு கவியரசர் கண்ணாதாசன் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், கவிஞர் அரு.நாகப்பன், எழுத்தாளர் கயல் தினகரன் ஆகியோருக்கு கவியரசர் விருதுகளை இலக்கியச் சிந்தனை அமைப்பின் நிர்வாகி ப.லட்சுமணன் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பரிசுகளை வழங்கினார்.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு கண்ணதாசன் ஆற்றிய பணிகள் குறித்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.

முன்னதாக ஏ.வி.எம்.சரவணன் வரவேற்றுப் பேசினார்.