Nagaratharonline.com
 
நேமத்தான்பட்டி கண்மாய் அருகே முட்செடியில் பச்சிளங் குழந்தை  Oct 21, 14
 
மனித நேயம் நாளுக்கு நாள் மங்கி வருவதற்கு, நேற்று பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை, முட்செடியில் வீசப்பட்டது, மீண்டும் உதாரணமாக திகழ்ந்துள்ளது.

காரைக்குடி கானாடுகாத்தான் நேமத்தான்பட்டி கண்மாய் அருகே, நேற்று அதிகாலை ஐந்து மணியளவில், அப்பகுதியை சேர்ந்த ருக்மணி என்பவர் சென்றார். முட்செடியில் இருந்து பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அவர் அருகில் உள்ள செக்போஸ்ட் போலீசார், கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் சிதம்பரத்துக்கு தகவல் தெரிவித்தார். உடலில் ரத்த காயங்களுடன் இருந்த அந்த குழந்தையை மீட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.குழந்தைக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் சதீஸ் கூறும்போது: பிறந்து ஒரு சில மணி நேரத்தில் குழந்தை முட்செடியில் வீசப்பட்டுள்ளது. கை, கழுத்து, கால்களில் முட்கள் குத்தி ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. காலில் பூச்சி ஏதோ கடித்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் வைத்து, சிகிச்சை அளித்து வருகிறோம். எட்டு மாத குறை பிரசவத்தில் பிறந்துள்ளது, 1.5 கிலோ எடை மட்டுமே உள்ளது, என்றார். வி.ஏ.ஓ., சந்திரன் புகாரின் பேரில், செட்டிநாடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ருத்ராபதி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.