|
தேவகோட்டை நகரத்தார் மேல் நிலைப்பள்ளியில் புத்தக திருவிழா Nov 4, 14 |
|
தேவகோட்டை நகரத்தார் மேல் நிலைப்பள்ளியில் தேவகோட்டை பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. நூற்றுக் கணக்கான பதிப்பகங்களின், பல்லாயிரக்கணக்கான பெயர்களில் புத்தகங்கள் குவிந்துள்ளன. வகை வகையான புத்தகங்கள்: ரூ. 10 முதல் ரூ. 5000 வரை புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இலக்கியம்,தத்துவம், கவிதைகள், செட்டாக சங்க கால புத்தகங்கள், கம்பராமாயணம், நாலாயிர திவ்யபிரபந்தம், ஆகியவற்றின் தொகுப்புக்கள் கிடைக்கின்றன. குழந்தைகள் விரும்பி படிக்கும் படக்கதைகள், பாடல்களின் டிவிடிக்கள், புதிய கல்வித்திட்டத்திற்கேற்ற புத்தகம் விற்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ். படிப்பை எதிர்கொள்வது, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான விடைகள் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எழுதியுள்ள புத்தகங்கள் கிடைக்கின்றன. |
|
|
|
|
|