Nagaratharonline.com
 
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்!  Nov 6, 14
 
 
உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடந் தது.

இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம், உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என போற்றி வணங்கப்படுகிறது. இந்த கோவில் கருவறை சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள சந்திரகாந்த கல், கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் இதமான வெப்பத்தையும் வெளியிட்டு கொண்டிருக்கிறது.

ஐ.நா., சபையின், யுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் நடைபெற்று வரு கிறது. நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி கும்பகோணம் சங்கரமடம் மற்றும் அன்னதான கமிட்டி சார்பில் பக்தர்களிடம் இருந்து பெறப் பட்ட, 100 மூட்டை அரிசியை கொண்டு, சாதம் வடித்து பிரகதீஸ்வரருக்கு சாத்தப்பட்டது. காலை 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடந்த அன்னாபிஷேகத்தை தொடர்ந்து, சுவாமிக்கு மலர் மற்றும் பழங்களால் அலங்கரித்து தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.