|
பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்துக்கான இடம் கொப்பனாபட்டி சாலையில் தேர்வு Nov 7, 14 |
|
பொன்னமராவதியில் வட்டாட்சியர் அலுவலகம், சார்நிலைக்கருவூலம் கட்டுவதற்கான இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் மாரிமுத்து வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொன்னமராவதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், சார்நிலைக்கருவூலம் ஆகியவை வாடகைக் கட்டத்தில் இயங்கி வருகின்றன. இதற்காக அந்த அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்ட கொப்பனாபட்டி சாலையில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் மாரிமுத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
|
|
|
|
|