|
NEWS REPORT: புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளுக்கு சிறப்பு ரெயில். Nov 14, 14 |
|
கோவை-செங்கல்பட்டு, ராமேசுவரம்-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு-கோவை இடையே வாரம் மூன்று முறை செல்லும் சிறப்பு ரெயில் (வ.எண்.06625), செங்கல்பட்டில் இருந்து வருகிற டிசம்பர் மாதம் 12, 15, 17, 19, 22, 24, 26, 29, 31, ஜனவரி மாதம் 2, 5, 7, 9, 12, 14, 16, 19,21, 23, 26, 28, 30 மற்றும் பிப்ரவரி 2, 4 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் கோவைக்கு அதிகாலை 2.30 மணிக்கு செல்லும்.
இந்த ரெயில்கள் சோமனூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, விருதாச்சலம், விழுப்புரம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
செங்கல்பட்டு-ராமேசுவரம் இடையே வாரம் இருமுறை செல்லும் சிறப்பு ரெயில் (வ.எண்.06751), செங்கல்பட்டில் இருந்து வருகிற டிசம்பர் மாதம் 16, 18, 23, 25, 30 மற்றும் ஜனவரி மாதம் 13, 15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, ராமேசுவரத்துக்கு அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு செல்லும்.
இந்த ரெயில்கள் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவக்கோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, விருதாச்சலம், விழுப்புரம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
டிக்கெட் முன்பதிவு நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. |
|
|
|
|
|