Nagaratharonline.com
 
சிவகங்கை மாவட்டத்தில் பைக்கில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்  Nov 17, 14
 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு திங்கள்கிழமை போலீஸார் அபராதம் விதித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தலைக் கவசம் அணியாமல் சென்றால் நவம்பர் 13ஆம் தேதிக்குப் பிறகு அபராதம் விதிக்கப்படுமென மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை சிங்கம்புணரி காவல் நிலையம் முன் காவல் ஆய்வாளர் ராஜராஜன், சப்- இன்ஸ்பெக்டர் சபரிநாதன் ஆகியோர் அவ்வழியாக தலைக் கவசம் அணியாமல் சென்ற 200க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் இனிமேல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக தலைக் கவசம் அணிந்து செல்ல வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.