|
பிள்ளையார்பட்டியில் கூடுதல் நேரம் நடைதிறப்பு Nov 20, 14 |
|
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விரத காலத்தை முன்னிட்டு கூடுதல் நேரம் நடை திறக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை பிறந்தவுடன், சபரிமலை செல்லும் பக்தர்கள் கற்பக விநாயகர் தரிசனத்திற்கு பிள்ளையார்பட்டி வந்து செல்கின்றனர். இதனால் இக்கோயில் நடை பிற்பகலில் கூடுதல் நேரம் திறக்கப்படுகிறது.வழக்கமாக காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும்,மாலை 4 மணி முதல் இரவு 8. 30 மணி வரையிலும் நடைதிறக்கப்பட்டிருக்கும். பகல் 1.00- மாலை 4.00 மணி வரை நடை பூட்டப்பட்டிருக்கும். தற்போது வரும் விரத பக்தர்களின் வசதி கருதி, கோயில் நிர்வாகம் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் பகலில் நடை பூட்டப்படாமல் கூடுதல் நேரம் திறந்து வைத்துள்ளனர். |
|
|
|
|
|