|
கொப்பனாபட்டி மக்கள் மீண்டும் தேர்தல் புறக்கணிப்பு Sep 24, 09 |
|
பொன்னமராவதி, செப். 23: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி மக்கள் மீண்டும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லை பிரச்னை காரணமாக கடந்த 6 முறையாக தேர்தலைப் புறக்கணித்துவரும் அவர்கள், அக். 7-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஊராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலைப் புறக்கணித்தனர்.
கொப்பனாபட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு கடந்த 16-ம் தேதி முதல் வேட்பு மனுக்களைப் பெறுவதற்காக தேர்தல் அலுவலர் வே. பழனிவேல், உதவித் தேர்தல் அலுவலர் பி. வெங்கடேசன் ஆகியோர் காத்திருந்தனர். இதேபோல, வட்ட உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுக்களைப் பெற ஊராட்சி ஒன்றிய திட்ட மேலாளர் வி. வேலு உதவித் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டு, அவரும் காத்திருந்தார்.
ஆனால், கடைசி நாளான புதன்கிழமை பிற்பகல் 3 மணி வரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
source ; Dinamani 24/09/09 |
|
|
|
|
|