Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டியில் இலவச மருத்துவ முகாம்  Nov 30, 14
 
கீழச்சிவல்பட்டி ஊராட்சியும் மானகிரி அப்போலோ ரீச் மருத்துவமனையும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கலாசாலை பள்ளி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர்.

அப்போலோ நிர்வாக மேலாளர் கற்பகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் கல்வி அறக்கட்டளைத் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இப்பொது மருத்துவ முகாமில் சிறப்பு சிகிச்சைகளாக பெண்கள் மற்றும் மகப்பேறு ஊட்டச்சத்து, மற்றும் உணவியல் ஆலோசனை, குழந்தை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம் போன்றவற்றுக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கபட்டது. நோயின் தீவிரம் குறித்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இம்முகாமில் இ.சி.ஜி., ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், முதலிய பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டன. கீழச்சிவல்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாம் முடிவில் முத்துராம்குமார் நன்றி கூறினார்.