Nagaratharonline.com
 
NEWS REPORT: சனிப் பெயர்ச்சி : வழிபட வேண்டிய ஆலயங்கள்  Dec 4, 14
 
வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த ஜய வருடம் மார்கழி மாதம் ஒன்றாம் தேதி (16.12.2014) அன்று பிற்பகல் 02.44 மணிக்கு சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு 10.12.2017 வரை சஞ்சரித்துவிட்டு தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆவார்.

சனி பகவானின் பெயர்ச்சியால் நம் வாழ்க்கையில் என்ன நடக்குமோ என்கிற பயம் கலந்த எதிர்பார்ப்பு உண்டாகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சனி பகவான் ஒரு ராசியில் சராசரியாக இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். ஒருவரின் ராசியிலிருந்து பன்னிரெண்டாம் ராசியில் சனிபகவான் சஞ்சரிக்கும்போது விரய சனிகாலம் என்றும், ஜன்ம ராசியில் அதாவது ஒன்றாம் ராசியில் சஞ்சரிப்பதை ஜன்ம சனி என்றும் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது பாத சனி என்றும் ஏழரை ஆண்டு சனி காலம் உள்ளது.

நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்த்தாஷ்டம சனி என்றும் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனி என்றும் வழங்கப்படுகிறது.

இந்த விருச்சிக ராசிப் பெயர்ச்சி காலத்தில் கன்னிராசி அன்பர்களுக்கு ஏழரை சனி முடிவடைகிறது. தனுசு ராசி அன்பர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது.

அனுகூலமற்ற ராசியை விட்டுப் பெயர்ச்சி ஆகும் காலத்தில் துன்பம் கொடுத்த ராசிக்காரர்களுக்கு ஏராளமான நன்மைகளைக் கொடுப்பார். இதனால்தான் சனி பகவானைப் போல் கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை; என்றும் “அவருக்கு நிகர் அவரே’ என்றும் வழங்கி வருகிறது.

சனி பகவானுக்கு உரிய வழிபாட்டுத் தலங்கள் பல இருந்தாலும் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது திருநள்ளாறு தலம். அடுத்ததாக தேனி மாவட்டத்தில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குச்சனூர் சனி பகவான்.

ஓமாம்புலியூர் சனிபகவான் -ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு/// திருக்கொள்ளிக்காடு -திருவாதிரைநட்சத்திரக்காரர்களுக்கு/// திருவானைக்காவல் சனி பகவான் -சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு/// சோழவந்தான் சனி பகவான் -விசாக நட்சத்திரக்காரர்களுக்கு/// திருப்பரங்குன்றம் சனி பகவான் -ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு/// திருச்செங்கோடு சனி பகவான் -சதய நட்சத்திரக்காரர்களுக்கு/// கொடுமுடி சனிபகவான் -அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு ///ஆகியவையும் சனி பகவானின் அருளைத் தரும் தலங்கள் ஆகும். மேற்குறிப்பிட்ட தலங்களில் ஒன்றுக்காவது சென்று வழிபடுவது நலம் பயக்கும்