|
மேலைச்சிவபுரி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் தொடக்கம் Feb 14, 10 |
|
பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு,கல்லூரியின் முதல்வர் தா. மணி தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட இளையோர் செஞ்சிலுவைச் சங்க நிர்வாகி பொன். கருப்பையா சங்கத்தைத் தொடங்கிவைத்தார்.
முன்னதாக, சங்க நிர்வாகி இராம. மோகன் வரவேற்றார். நிறைவில், மாணவப் பொறுப்பாளர் ஆர். புவனேஸ்வரி நன்றி கூறினார்.
source : Dinamani |
|
|
|
|
|