Nagaratharonline.com
 
பொன்னமராவதி பகுதியில் கார்த்திகை தீப விழா  Dec 5, 14
 
பொன்னமராவதி பகுதியில் உள்ள கோயில்களில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தேனிமலை முருகன் கோயில், பொன்னமராவதி சோழீசுவரர் கோயில், பாலமுருகன் கோயில், மலையாண்டி கோயில், வையாபுரி சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. பொன்னமராவதி சுற்று வட்டார கிராமங்களில் வெள்ளிக்கிழமை இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

பிரான்மலையில் 2500 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. மலை மீதுள்ள பாலமுருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 5 மணிக்கு தீபக்குன்று,பாலமுருகன் கோயில் தீபத்தொட்டியில் மகாதீபம் ஏற்றப்பட்டது