Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூரில் ஜன.1இல் சொர்க்க வாசல் திறப்பு  Dec 14, 14
 
திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெüமியநாராயண பெருமாள் திருக்கோயிலில் புத்தாண்டான ஜனவரி 1ஆம் தேதி சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.

திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெüமியநாராயண பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவும், ஆங்கில புத்தாண்டு விழாவும் ஒரே நாளில் வருவதால் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஜனவரி 1ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று, சுவாமி இரவு 10.30 மணிக்கு சன்னதியிலிருந்து புறப்பட்டு திருமாமகள் தாயார் சன்னதி வந்தடைந்து சொர்க்கவாசல் வழியாக புறப்பாடு நடைபெற்று ஏகாதசி மண்டபம் வந்தடைவார்.