Nagaratharonline.com
 
குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம்  Dec 14, 14
 
'திருப்பதி ஏழுமலை யான், குபேரனிடம் பெற்ற கடன் எவ்வளவு? அதற்கான வட்டியாக இதுவரை எவ்வளவு தொகை செலுத்தப்பட்டு உள்ளது? இன்னும் எத்தனை ஆண்டுகளில் இந்த கடன் நிறைவடையும்?' என, பெங்களூருவை சேர்ந்த பக்தர் நரசிம்ம மூர்த்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், விவரம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

தேவஸ்தானத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. எனினும், இந்த வருவாய் அனைத்தும், ஏழுமலையான் தன் திருமணத்தின் போது, குபேரனிடம் பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக, பக்தர்களால் நம்பப்படுகிறது.
இதற்கிடையே, கோவிலுக்கு கிடைக்கும் வருவாய் அனைத்தையும், கடனுக்கான வட்டியாக செலுத்துவதாகக் கூறி, தேவஸ்தானம் போர்டு பக்தர்களை ஏமாற்றுவதாக, பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.ஆந்திர மாநில தகவல் ஆணையத்திடம், அவர் அளித்துள்ள ஆர்.டி.ஐ., விண்ணப்பத்தில், 'ஏழுமலையான் பெற்ற கடன் தொகை எவ்வளவு? அதற்கான வட்டியாக இதுவரை எவ்வளவு தொகை செலுத்தப்பட்டுள்ளது? இந்தக் கடன் எப்போது முடியும்?' என, கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த விண்ணப்பத்தை, ஆந்திர மாநில தகவல் ஆணையம், திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. நரசிம்ம மூர்த்தியின் இந்த கேள்விகளால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.